தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உழைக்கும் மக்களுக்கான மோசமான 10 நாடுகளில் இந்தியா - சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு

பிரஸ்ஸல்ஸ் [பெல்ஜியம்]: உழைக்கும் மக்களுக்கான மோசமான 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உழைக்கும் மக்களுக்கான மோசமான 10 நாடுகளில் இந்தியா
உழைக்கும் மக்களுக்கான மோசமான 10 நாடுகளில் இந்தியா

By

Published : Jul 21, 2020, 4:29 AM IST

சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு, 144 நாடுகளில் உலகளாவிய உரிமை மதிப்பீட்டை ஒப்பீடு செய்து, உழைக்கும் மக்களுக்கான மோசமான நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முதல் பத்து மோசமான நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இதில், பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஹோண்டுராஸ், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் ஜிம்பாப்வே. பாலஸ்தீனம், சிரியா, யேமன் அடங்கும்.

லிபியாவில் தொடர்ந்து பாதுகாப்பற்ற தன்மை, மோதல்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் , தொழிற்சங்க உரிமைகளுக்கான மிகவும் பிற்போக்குத்தனமான பிராந்தியத்துடன் இணைந்து ஏழு ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா மிக மோசமான பிராந்தியமாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. .

ஐ.டி.யூ.சி அறிக்கை 85 விழுக்காடு நாடுகள் வேலைநிறுத்த உரிமையை மீறியதாகவும், 80 விழுக்காடு நாடுகள் கூட்டாக பேரம் பேசும் உரிமையை மீறியதாகவும் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் பதிவுக்கு தடையாக இருந்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும் கூறியுள்ளது.

இந்தியா, எகிப்து மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய மூன்று புதிய நாடுகள் தொழிலாளர்களுக்கான மோசமான பத்து நாடுகளின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளன. 72 விழுக்காடு நாடுகளில் தொழிலாளர்களுக்கு நீதிக்கான அணுகல் இல்லை. அதே நேரத்தில், தொழிலாளர்கள் 61 நாடுகளில் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகளில், தொழிற்சங்கங்களின் தற்போதைய அடக்குமுறை மற்றும் உரிமைகளை மதிக்க மற்றும் சமூக உரையாடலில் ஈடுபட அரசாங்கங்கள் மறுத்திருப்பது தொழிலாளர்களை நோய் மற்றும் இறப்புக்கு ஆளாக்கியுள்ளது மற்றும் தொற்றுநோயை திறம்பட எதிர்த்துப் போராட முடியாமல் போய்விட்டது.

அரசாங்கங்களும் முதலாளிகளும் உழைக்கும் மக்களுடன் வைத்திருக்கும் சமூக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முறிவை உலகளாவிய உரிமைகள் அட்டவணை அம்பலப்படுத்துகிறது. "கூட்டுப் பேரம் பேசுவதன் மீறல்கள், வேலைநிறுத்த உரிமையைத் தடுத்து நிறுத்துதல் மற்றும் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களிலிருந்து விலக்குவதன் மூலம் வேலை உரிமைகளை கட்டுப்படுத்தும் போக்கு உள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details