கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ளது, கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணை. கர்நாடக மாநிலம், நந்திமலைப் பகுதியிலிருந்து, தென்பெண்ணை ஆறு வழியாக தமிழ்நாடு வரும் நீர், கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் சேமிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அணை உள்ளிட்டப் பகுதிகளுக்குச் சென்றடைகிறது.
எல்லைப்பகுதியில் கனமழை: கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! - Hosur Karnataka border
கிருஷ்ணகிரி: கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகள், ஓசூர் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் (ஜூலை 11) அணைக்கு விநாடிக்கு 480 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், 480 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 12), கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடிகளில் 40.34 அடி நீர் இருப்பு வைக்கப்பட்டு, விநாடிக்கு 640 கனஅடி நீர் வரத்தாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்புக் கருதி, அப்படியே தென்பெண்ணை ஆற்றில் 640 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.