தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வருமானவரித் துறை ஆணையர் நியமனத்தில் முறைகேடா?- வருமானவரித் துறை விளக்கம் - income tax department clarified

டெல்லி: வருமான வரித் துறை ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

வருமானவரித் துறை ஆணையர் நியமனத்தில் முறைகேடா?- வருமானவரித் துறை விளக்கம்
வருமானவரித் துறை ஆணையர் நியமனத்தில் முறைகேடா?- வருமானவரித் துறை விளக்கம்

By

Published : Jul 16, 2020, 12:22 AM IST

டெல்லி வருமானவரித் துறை தலைமை ஆணையர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக வளைதளங்களில் குறிப்பாக, வாட்ஸ் ஆப்பில் வதந்திகள் பரவிவருகின்றது. டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ள வருமானவரித் துறை தலைமை ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்து வருமானவரித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஆணையர் முற்றிலும் முறையான பணி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டதாகும்.

இந்த நியமனம் என்பது நேரடியாக நியமனம் செய்யப்பட்டது என்பதில் உண்மை இல்லை. வருமான வரித்துறையில் நியமிக்கப்படும் அனைத்து non - gazetted பணியிடங்கள் அனைத்தும் ( SSC ) மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுபவையாகும்.

மேலும், இப்பொறுப்புகள் அனைத்தும் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிசன் அடிப்படையில் நியமிக்கப்படுகிறது. நியமனங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ( upsc) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், சந்தேகம் ஏற்படுவோர் அதனை பார்த்து தெரிந்தது கொள்ளலாம். பொதுமக்கள் இதுபோன்ற தவறாக பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்” என வருமான வரித்துறை சார்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details