ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகேயுள்ள தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் யசோதா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை தணிக்கை அலுவலர் மணியும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அலுவலர் மீது புகார் - இளம்பெண் பாலியல் வன்கொடுமை
ஈரோடு: திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தை பெண்ணின் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் யசோதாவை திருமணம் செய்வதுகொள்வதாக மணி ஆசை வார்த்தை கூறி தனிமையில் பழகிவந்துள்ளார். அதன் பின்னர் சில மாதங்கள் கழிந்து மணி வீட்டில் அவருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து யசோதா, மணியிடம் கேட்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த யசோதா தனது பெற்றோருடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்து ஈரோடு மகளிர் காவல்நிலையம் சென்ற அவர்கள் அங்கு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காதலன் மணி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது.