உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து அந்நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார். அதில், குறிப்பாக டாஸ் வென்றால் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து அவர் அறிவுறை வழங்கியிருந்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இல்லையெனில் டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பட்டிருந்தார். ஆனால், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது டாஸ் வென்ற பின் பேட்டிங்கதைத் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தார்.