மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியோடு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் திருமாவளவனுக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் பேசியதாவது,
தர்மத்துக்கு கிடைத்த வெற்றி - திருமாவளவன் "சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் என்னை வெற்றிபெற வைப்பது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி அறம், தர்மத்துக்கு கிடைத்த வெற்றி. முன்கூட்டிய தெரிவித்தபடி சாதி, மத சக்திகளுக்கு இடம் தர மாட்டோம் என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழ்நாடு மக்கள் உணர்த்தியுள்ளனர்.
அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், கேரளா, தமிழ்நாடு மாநிலத்தில் அவர்களது ஜம்பம் எடுபடவில்லை. ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசையில் பயணித்தாலும், தமிழ்நாடு மக்கள் மட்டும் அறம் சமூக நீதியின் வழியில் பயணிக்கும் என்பது இந்தத் தேர்தல் உறுதிப்படுத்திருக்கிறது. நான் இந்த வெற்றியை ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்திற்கும், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள், பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
ஓடுக்கப்பட்ட சமுக்கத்திற்கு இந்த வெற்றி அர்ப்பணம் நான் மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது வேண்டுமானாலும் குறைவாக இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரையில் நான் இந்த வெற்றியை மகத்தான வெற்றியாகத்தான் பார்க்கிறேன்" என்றார்.