விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது விற்பனை: மூவர் கைது! - three persons arrested
விழுப்புரம்: மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோத மதுவிற்பனை: மூவர் கைது!
அதன்படி இன்று முழு ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பொய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீ, சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் பணமலையை சேர்ந்த பெருமாள் ஆகியோரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.