தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'அது நடந்தால்... பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்த முடியாது..!' - ஜாவித் மியான்தத் - ஜாவித் மியான்தாத்

"இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து வென்றால், பின் எந்த அணியும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது" என்று, அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தாத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி

By

Published : May 18, 2019, 10:39 PM IST

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குவதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தொடரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் வெற்றிபெறும் என வல்லுநர்கள் ஒருபக்கம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியின் ஆட்டத்திறனை கணக்கிடவே முடியாது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை தொடர்களில் மற்ற அணிகளுக்கு ஷாக் தந்துள்ளது.

ஜாவித் மியான்தத்

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறுகையில்,

"பாகிஸ்தான் அணி சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அணியை பொறுத்த வரையில், ஒரு போட்டியில் வெற்றிபெற்று உத்வேகத்தை அடைந்தால், அதன் பின் எந்த அணியாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. 1992 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்ல எந்த அணியும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திதான் தொடரை வென்றோம். அதேபோல்தான், 2017 சாம்பியன்ஸ் டிராஃபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதனால், இம்முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே உத்வேகத்தை அடைந்துவிட்டால், அதன் பின் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை" என்றார்.

12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இப்போட்டி மே 31 ஆம் தேதி நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1992இல் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பை வென்றது. அதேபோல், சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 2017இல் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details