12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. மே30 முதல் ஜூலை 14 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை கடந்த மாதமே அறிவித்தன. இதுமட்டுமின்றி, தொடரில் விளையாடுவதற்காக தங்களை பலப்படுத்தி வருகின்றன.
உலகக் கோப்பையில் ஓங்கி ஒலிக்கப்போகும் தாதா குரல்..! - ஐசிசி உலகக் கோப்பை
ஐசிசி அறிவித்துள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 24 வர்ணனையாளர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இடம்பிடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் தாதா...!
இந்நிலையில், இந்தத் தொடரில் வர்ணனையாளராக ஈடுபட போகும் 24 பேரின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், இந்தியா சார்பில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்ளே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கங்குலி மீண்டும் வர்ணனையாளராக திரும்பியதால், அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வர்ணனையாளர்கள் விவரம்:
- இந்தியா: கங்குலி, சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்ளே
- பாகிஸ்தான்: ரமிஸ் ராஜா, வாசிம் அகர்ம்
- இலங்கை: குமார் சங்ககரா
- தென்னாப்பிரிக்கா: ஷான் பொல்லாக், கிரீம் ஸ்மித்
- நியூசிலாந்து: மெக்கல்லம், இயன் ஸ்மித்,சைமன் டோல்
- இங்கிலாந்து: இயன் வார்டு, நாசர் ஹுசைன், மார்க் நிகோலஸ், மைக்கேல் அதர்டன், இஷா குஹா,அலிசன் மிட்சல்,
- ஆஸ்திரேலியா: மைக்கேல் சிலேட்டர், மைக்கேல் கிளார்க், மெல் ஜோன்ஸ்
- வங்கதேசம்: அக்தர் அலிகான்
- ஜிம்பாப்வே: போமியோ பங்குவா
- வெஸ்ட் இண்டீஸ்: மைக்கேல் ஹோல்டிங், இயன் பிஷப்