தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கோலியை பார்த்துதான் பேட்டிங் கற்றுக்கொள்கிறேன்! - பாபர் அசாம் - Kohli

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் வீடியோவை பார்த்து, தான் பேட்டிங்கை கற்றுக்கொண்டதாக, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

கோலியை பார்த்துதான் பேட்டிங் கற்றுக்கொள்கிறேன் - பாபர் அசாம்

By

Published : Jun 16, 2019, 9:06 AM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக, இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கூறுகையில்,

"சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. அந்த வெற்றி எங்களுக்கு ஏரளமான நம்பிக்கை தந்துள்ளது. இதனால், நாளைய (ஜூன் 16) போட்டியில் மீண்டும் இந்தியாவை வீழ்த்துவதற்கு சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி இன்ஸ்பிரேஷனாக இருக்கும்" என்றார்.

மேலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பேசுகையில்,

"விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். பல்வேறு தட்பவெட்ப நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவரது பேட்டிங் வீடியோவை பார்த்துதான் கற்றுக்கொள்கிறேன். அவரது பேட்டிங் மூலம் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், கோலி எப்படி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறாரோ அது போலதான் நானும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்க வகிக்கக்கூடிய வீரராக வேண்டும் என முயற்சி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தப் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இவ்விரு அணிகள் மோதிய போட்டியில், விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details