தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கணவன், மனைவி குடும்பத் தகராறு - கணவன் உயிரிழப்பு - Husband dies in family dispute

தருமபுரி: பாலக்கோடு அருகே கணவன் மனைவி குடும்பத் தகராறில் கணவன் உயிரிழந்தார்.

தருமபுரி பாலக்கோடு அருகே கணவன் மனைவி குடும்பத் தகராறில் கணவன் உயிரிழப்பு
தருமபுரி பாலக்கோடு அருகே கணவன் மனைவி குடும்பத் தகராறில் கணவன் உயிரிழப்பு

By

Published : Jul 6, 2020, 5:25 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டள்ளி சந்தை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37) இவரது மனைவி மஞ்சு இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. சுரேஷுக்கும் அவரது மனைவி மஞ்சுவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சுரேஷ் தனது மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் மனைவி மஞ்சு மாரண்டள்ளி காந்திநகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தாய் வீட்டுக்குச் சென்ற மஞ்சுவிடம் அவரது வீட்டிற்கு சென்று சுரேஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது சண்டையில் மஞ்சுவின் தம்பி சசிகுமார் மற்றும் அவரது தந்தை மணியை சுரேஷ் தாக்கியதாகவும் பதிலுக்கு இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.

குடும்ப சண்டையில் சுரேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details