பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி வனிதா (23). திருமணமாகி ஏழு வருடங்களான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சதீஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர் - கொலை முயற்சி
பெரம்பலூர்: குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Husband arrested for trying to kill wife
இந்நிலையில் நேற்று(ஜூலை 12) இரவு குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வனிதா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்துளார்.
பின்னர் அங்குள்ளவர்கள் உடனடியாக தீயை அணைத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 20 விழுக்காடு தீக்காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வனிதா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்