தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

எல்ஐசி முகவர் மனைவியுடன் தற்கொலை! - திண்டுக்கல் எல்ஐசி முகவர் மனைவியுடன் தற்கொலை

திண்டுக்கல்: எல்ஐசி முகவர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband And Wife Suicide
Husband And Wife Suicide

By

Published : Jul 1, 2020, 6:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பில்டிங் சொசைட்டி தெருவைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் எல்ஐசி முகவராக பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் உணவருந்திவிட்டு உறங்கியுள்ளனர். இன்று காலை இருவரும் உயிரற்ற நிலையில் இருந்துள்ளனர்.

இதனைக் கண்ட அவர்களது மகள் இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றிய உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இருவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கணவன் மனைவி இருவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பத்தகராறு, பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்தில் வத்தலகுண்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தூய்மைப் பணியாளரை கவுரவித்த இயக்குநர் செந்தில்

ABOUT THE AUTHOR

...view details