வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியதாவது, 'கொலை, மரணம், பாலியல் வன்புணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாதம் 4500 ரூபாய் நிவாரணத் தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டு மனை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கொலையானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, நிவாரண நிதி மட்டும் வழங்கியதாகவும், பிற நிவாரணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.