தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 12:21 AM IST

ETV Bharat / briefs

'திரைப்படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன்' - ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே திரைப்படங்கள் இயக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராதிகா
ராதிகா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ராதிகா ஆப்தே தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 'ஸ்லீப் வாக்கர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்குறும்படத்தில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுகுறித்து ராதிகா ஆப்தே பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு திரைப்படம் இயக்க பிடித்திருக்கிறது. மக்கள் அதை பார்க்கப் போகிறார்கள் என்பதை நினைத்து ஆர்வத்துடன் இருக்கிறேன். படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்னையைப் பற்றியது அல்ல. படம் எதைப் பற்றியது என்பது ட்ரெய்லரில் முழுவதும் தெரியாது.

இப்போது அதைப் பற்றிச் சொல்ல முடியாது. திரைப்படம் வெளியான பிறகு தெரியும். ஊரடங்கு காலத்தில் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. திரைப்படங்கள் இயக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details