தருமபுரி மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பு மற்றும் ஹோமியோபதி மருத்துவ குழுமம் இணைந்து கரோனா தொற்று தடுப்பு மருத்துவ முகாம் நடத்தியது.
செவிலியர்களுக்கு மருந்துகளை வழங்கிய பசுமை தாயகம் அமைப்பு! - செவிலியருக்கு மாத்திரைகள் வழங்குதல்
தருமபுரி: தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு ஹோமியோபதி மருந்துகளை பசுமை தாயகம் அமைப்பினா் இலவசமாக வழங்கினா்.

செவிலியருக்கு மாத்திரைகள் வழங்கிய பசுமை தாயகம் அமைப்பு
இந்த முகாமை தருமபுரி முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில் தொடங்கிவைத்தார். மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பை உருவாக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்னும் ஹோமியோ மருந்துகளை வழங்கினார். இது ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்த மருந்தாகும். இந்நிகழ்ச்சியில் 1,200 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.