திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைநல்லூர் பகுதியில் ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்துக்கான குடோன் உள்ளது. இங்கு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரணி, கவரப்பேட்டை, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து என்பவர் பணியாற்றி வருகிறார்.
அமேசான் குடோனில் செல்போன்கள் கொள்ளை: 8 பேர் மீது வழக்குப்பதிவு
திருவள்ளூர்: அமேசான் குடோனில் இருந்து விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்துள்ளதாக அங்குப் பணிபுரிந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர் பொருட்களை சரிபார்த்த போது விலையுயர்ந்த செல்போன்கள் கொள்ளை போனதை கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து பத்தாயிரம் ஆகும். செல்போன்களை திருடியதாக, இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 8 பேர் மீது அமேசான் நிறுவனம் புகார் அளித்ததன் பேரில், ஆரணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த குமார், ஜிம்மிமோகிதீன், சென்னயைச் சேர்ந்த ரவி, நவீன், முகமது ராகுல், பிரபு, சரவணவேல், சீமாவரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ஆகிய எட்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.