திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிலும், பகல் பொழுதுகளில் வெயில் அதிகமாகக் காணப்பட்டாலும் மாலை நேரங்களில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பரளி, வத்திபட்டி, கோவில்பட்டி, லிங்கவாடி, சமுத்திராபட்டி, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 12) மாலை திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தன. அதைத் தொடர்ந்து பலத்தக் காற்று, இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரமாகப் பெய்தது.