கடலூரில் கடந்த சில நாள்களாகவே கத்திரி வெயில் கொளுத்தியது. இதனால் கடலூர், மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம், புதுப்பாளையம், வண்டிப்பாளையம், சாவடி, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் அப்பகுதியில் அனல் காற்று வீசியது.
கடலூரில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி! - கடலூரில் கனமழை
கடலூர்: இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Heavy Rain in Cuddalore
கரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்தவர்கள் வெக்கையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், கடலூர் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
Last Updated : Jun 5, 2020, 10:33 PM IST