தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் கரோனாவை விரட்டலாம்! - கிருஷ்ணகிரி கரோனா செய்திகள்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் கரோனாவை எளிதாக விரட்டலாம் என கரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய துப்புரவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 Health Inspector recovered from Corona In Krishnagiri
Health Inspector recovered from Corona In Krishnagiri

By

Published : Jul 7, 2020, 3:59 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் கிரி(52) மற்றும் சுந்தரமூர்த்தி(53). இவர்கள் இருவரும் சென்னையில் கரோனா தடுப்பு பணிகளில் 20 நாள்கள் ஈடுபட்டு ஒசூருக்கு திரும்பியபோது, இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றி முழுமையாக குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினர்.

கரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய துப்புரவு ஆய்வாளர்களை மாநகராட்சி ஆணையர், சக பணியாளர்கள் பூங்கொத்து வழங்கி கைகளை தட்டி வரவேற்றனர்.

அப்போது துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், "கரோனா தொற்றைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே போதுமானதாக உள்ளதென்றாலும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினாலே கரோனாவை முழுமையாக விரட்டிவிட முடியும்.

தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கரோனா தனிமை வார்டில் அரசு சிறப்பான சிகிச்சையுடன் கவனித்துக்கொள்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details