அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): விசாகப்பட்டினத்தில்தற்போதுஉள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சுதாகர் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 5) அனுமதியளித்துள்ளது.
மருத்துவர் சுதாகரின் தாயார் காவேரி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அனுமதியுடன் சுதாகர் அங்கிருந்து வெளியேறலாம் என்று கூறியுள்ளனர்.
நல்ல மருத்துவமனையில் என்னை சேருங்கள்: ஆந்திர மருத்துவர் கடிதம்!
மேலும், இவ்வழக்கு குறித்து சிபிஐ விசாரித்து வருவதால், அவற்றுக்கு தவறாமல் ஒத்துழைப்பு வழங்கும்படி மருத்துவர் சுதாகரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இவ்வுத்தரவால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக மருத்துவர் சுதாகரின் தாயார் தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பு குறித்து அவர் தெரிவிக்கையில், “அரசிடம் இருந்து எனக்கு பல அச்சுறுத்தல்கள் வந்தன. எனினும், சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மகனை நல்ல மருத்துவமனையில் சேர்ப்பேன்” என்று கூறியுள்ளார்.