தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ரூ.30 லட்சம் குட்கா பறிமுதல்! - பள்ளிகொண்டா காவல்துறையினர்

வேலூர்: குடியாத்தம் அருகே தடை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ரூ. 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!
ரூ. 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

By

Published : Oct 20, 2020, 8:20 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான ஹான்ஸ், குட்கா போன்றவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் சென்னை தேசிய பெங்களூரு நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், அதில், குட்கா, ஹான்ஸ் பொருள்களின் மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்ததோடு, லாரி ஓட்டுநரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வின் மதிப்பு ரூ.30 லட்சம் என பள்ளிகொண்டா காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details