இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நிலைமைகள் சரியானதற்குப் பிறகு தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவுகளை மேற்கொள்வார். பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு முதலமைச்சர் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாடத்திட்டத்தைக் குறைக்க 18 பேர் கொண்ட குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டர்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Group of 18 to cut school curriculum - Minister Sengottaiyan
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 14 அரசு அலுவலர்கள், நான்கு கல்வியாளர்கள் என மொத்தம் 18 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.