திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் பால் பண்ணையில் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மணி நேற்று காலை பணிக்குச் செல்லும் தனது மகளை இருசக்கர வாகனத்தில் நிறுவனத்தின் அருகே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, காவாங்கரை சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவர் மீது மின்னல் வேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதனால் நிலை தடுமாறிய அவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.