பொறியியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி கூடிய பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை குறித்த மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவுசெய்யப்பட்டு, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இணையதள விண்ணப்ப பதிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மேல்நிலை வகுப்பிற்கான தேர்வு நுழைவுச்சீட்டு மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், மாத வருமான சான்றிதழ், சிறப்பு விளையாட்டு சான்று, அதற்கு இணையான சான்றிதழ் சிறப்பு முன்னாள் ராணுவத்தினர் சான்று, அதற்கு இணையான சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் எடுத்துவர வேண்டும் எனவும் மாணவர்கள் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.