தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் லட்சுமணன் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்! - நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன்

சென்னை : உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Governor condoles the death of Justice Lakshmanan
Governor condoles the death of Justice Lakshmanan

By

Published : Aug 27, 2020, 9:27 PM IST

இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மறைவு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

அவர் ஒரு நல்ல மனிதராக இருந்து தனது வாழ்நாளை மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக செலவிட்டிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு ராஜஸ்தான் மற்றும் ஆந்திர மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். அவரின் மறைவு இந்திய மக்களுக்கும் குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details