அரசு வெளியிட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய அறிக்கையில், "மே மாதத்திற்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. மே மாதத்தில் ஊரடங்கு விடுப்பு நாள்களை ஊழியர்களின் வேலை நாள்களில் சேர்த்து அந்த விடுப்பையும் கழித்துவிட்டு சம்பளம் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.
முழு ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! - Govt Transport Employee's Protest Salary issue
கோவை: மே மாதத்திற்கான முழு ஊதியத்தையும் வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![முழு ஊதியம் வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! Govt Transport Employee's Protest In Covai Transport Employee's salary issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:28-tn-cbe-01-bus-staffs-protest-visu-tn10027-31052020114912-3105f-00496-892.jpg)
இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் ரஷிப் செய்தியாளர்களிடம் பேசுகையில், " போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். மே மாதத்திற்கான முழு ஊதியத்தையும் வழங்கவேண்டும். கரோனா தொற்று காரணமாக விடப்பட்ட ஊரடங்கு விடுப்பை ஊழியர்களின் விடுப்பில் சேர்க்கக்கூடாது. இதை உடனடியாக அரசு பரிசீலிக்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் தொடரும்" என்றார்.