காவிரி டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 வருவாய் கிராமங்களுக்கு, 2019-20ஆம் ஆண்டு காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது தடுப்புகளை கொண்டு விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேளாண் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அரசு தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் போராட்டம் - Nagai district news
நாகை: டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து காவிரி விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
பின்னர் அங்கேயே வேளாண் பயிர் காப்பீடு நிறுவனம், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அந்நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வேளாண் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோஷங்கள் ஆக முழங்கினர்.