கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து திருப்பூருக்குப் பெரும்பாலானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாமாக மாறிய அரசுப் பள்ளி! - Corono cases
திருப்பூர்: வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்த ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

Government School
அதனடிப்படையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஜெய்வாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது வகுப்பறைகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ன.
இதற்காக 96 படுக்கைகளுடன் அரசுப் பள்ளி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளியிலேயே பரிசோதனை மேற்கொள்ள வசதியாக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.