தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரூ.1000 நிவாரணம் - மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கியது

திருவள்ளூர்: அரசு வழங்கும் நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் பழவேற்காடு அருகே லைட் ஹவுஸ் ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டது.

thiruvallur
thiruvallur

By

Published : Jul 5, 2020, 4:47 PM IST

கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே லைட் ஹவுஸ் ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நிவாரணத் தொகை பணத்தை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வருவாய்த் துறையினர் வழங்கி வருகின்றனர்.

திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் ஆகியோர் 19 மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை சரிபார்த்து நிவாரணத் தொகையை வழங்கினார்.

இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details