தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அறநிலையத் துறையில் காணாமல்போன சிலையை மீட்க அரசு நடவடிக்கை! - Government action to recover missing temple statue

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் காணாமல்போன சிலைகள் எத்தனை? என்ற விவரங்களை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Government action to recover the missing statue in the Treasury
Government action to recover the missing statue in the Treasury

By

Published : Sep 30, 2020, 5:31 AM IST

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் அனைத்துக் கோயில்களின் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1300 சிலைகளில் 830 கற்சிலைகள் உள்பட காணாமல்போயுள்ளதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல்போன சிலை விவரங்களை 1950ஆம் ஆண்டிலிருந்து தொகுத்து படிவத்தில் அனுப்பிட அனைத்துக் கோயில்களின் அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அந்தப் படிவத்தில் மாவட்டத்தின் பெயர், கோயில் பெயர், முகவரி, 1950ஆம் ஆண்டிலிருந்து காணாமல்/களவுபோன சிலைகளின் விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர், உலோக சிலை விவரம், பெயர், காணாமல்போன தேதி/வருடம், களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா? செய்யப்பட்டிருப்பின், முதல் தகவல் அறிக்கை, வழக்கின் விவரம் உள்ளிட்ட விவரங்கள் அந்தப் படிவத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details