தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்: தற்கொலை செய்துகொண்ட காதலி - காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் காதலி தற்கொலை

திருவள்ளூர்: திருத்தணி அருகே நான்கு வருடங்களாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Girlfriend commits suicide after refusing to marry boyfriend
Girlfriend commits suicide after refusing to marry boyfriend

By

Published : Jun 14, 2020, 1:16 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் மணிமேகலை திருத்தணியில் உள்ள மருந்து கடையில் வேலைப் பார்த்து வந்தார்.

மணிமேகலையை திருத்தணியை அடுத்த வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சகஜமாகப் பழகி உள்ளார்.

இந்நிலையில் இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலன் வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை பேசியும் திருமணம் செய்ய சம்மதிக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணிமேகலை இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கழகமாசத்திரம் காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details