சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மே 23ஆம் தேதியன்று உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளியைப் பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவ ஊழியர்கள்! - மருத்துவமனையில் பாலியல் வன்புணர்வு
பிலாஸ்பூர்: தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவ பணியாளர்கள்!
அப்போது அந்த வார்டில் பணியாற்றி வந்த இரு ஊழியர்கள் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் மருத்துவமனை நிர்வாகத்திடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பெண்ணிடம் விசாரித்ததில், தன்னை வன்புணர்வு செய்த இருவரை அடையாளம் காட்டியுள்ளார். பின்னர் இரு ஊழியர்களையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.