இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த 16ஆம் தேதி இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில், பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சீனாவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் அதிகம் உபயோகிக்கப்படுவதால், அவற்றையும் உபயோகிக்க வேண்டாம் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.