உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், சவுதாம்டனில் நடைபெற்றுவரும் 19ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
CWC19: ரன்குவிப்பில் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் - ENG v WI
இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை எடுத்து விளையாடிவருகிறது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய இவன் லெவிஸ், வோக்ஸ் பந்துவீச்சில் இரண்டு ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதைத்தொடர்ந்து, ஹோப் உடன் ஜோடி சேர்ந்த கெயில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், கெயில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஹோப், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப் தராமல் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சற்றுமுன் வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து 106 ரன்களை எடுத்து, ரன் குவிப்பில் தடுமாறிவருகிறது. நிகோலஸ் பூரான் 24 ரன்களிலும், ஹெட்மயர் 23 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ப்ளங்கட், வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.