தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குத்துச்சண்டை: இந்தியாவுக்கு இரண்டு தங்கம் - குத்துச்சண்டை

வார்சாவில் நடைபெற்ற ஃவெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை தொடரில், இந்திய வீரர் கவுரவ் சொலன்கி, மனீஷ் கவுசிக் ஆகியோர் தங்கப்பத்தக்கம் வென்று அசத்தினர்.

குத்துச்சண்டை: இந்தியாவுக்கு இரண்டு தங்கம்

By

Published : May 5, 2019, 9:04 PM IST

போலாந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் ஃவெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் கவுரவ் சொலன்கி, இங்கிலாந்தின் வில்லியம் காவ்லேவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட சொலன்கி 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கம் வென்றார். இதேபோல், 69 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் மனீஷ் கவுசிக் 4-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மொராக்கவின் முகமது ஹமவுட்டை ( Mohamed Hamout) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

முன்னதாக நடைபெற்ற 56 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் (Mohammed Hussamuddin) 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்யாவின் முகமது ஷேகாவிடம் தோல்வி அடைந்தார். இதனால், ஹூசாமிதீனுக்கு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது.

இந்தத் தொடரில், இந்திய வீரர்களான மந்தீப் ஜாங்க்ரா, சன்ஜீத், அன்கீட் கடானா ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details