இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மது உற்பத்தி நிறுவனம் ஒன்று மதுபாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தை பொறித்துள்ளதாக மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் தலைவர் எபி ஜெ ஜோஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படம்! - jerusalem
ஜெருசலேம்: மாகத்மா காந்தியின் புகைப்படம் பொறித்த மதுபாட்டில்களை விற்பனை செய்து சர்ச்சைக்குள்ளாகிய இஸ்ரேல் மது உற்பத்தி நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
bottle
அந்தக் கடிதத்தில், காந்தியை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள அப்புகைப்படத்தை நீக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, காந்தியின் படம் பொறிக்கப்பட்ட அந்த மது பாட்டில்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாகவும், இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்த அச்செயலுக்கு தாங்கள் பகிரங்க மன்னிப்புக் கோருவதாகவும் இந்திய அரசிடம் அந்நிறுவனம் கூறியுள்ளது.