நாமக்கல் மக்களவை தொகுதியில் அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் காந்தியவாதி என்பதால் எப்போதும் மகாத்மா காந்தி போன்று உடை அணிவது வழக்கம். தேர்தல் செலவினத்திற்காக போதிய பணம் இல்லை என கூறி நாமக்கல்லில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த வாரம் தேர்தல் செலவினத்திற்காக ரூ.50 லட்சம் கேட்டு தன்னுடைய கடவுசீட்டு, ஆதார் அட்டையை அடமானம் வைத்துக்கொண்டு தொகையை அளிக்கவேண்டும் என விண்ணப்பம் அளித்திருந்தார்.
கடன்கொடுக்க மறுத்த வங்கி முன்பு நூதன போராட்டம்! - பாரத ஸ்டேட் வங்கி
நாமக்கல்: தேர்தல் செலவினத்திற்காக கடன் கொடுக்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு நூதன முறையில் காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்த வேட்பாளரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தேர்தல் செலவினத்திற்காக கடன் தரமுடியாது என வங்கி நிர்வாகம் அவரது மனுவை நிராகரித்தது. எனவே தனக்கு கடன் வழங்காத நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கியின் முகப்பில் நின்றுக்கொண்டு திருவோடு ஏந்தியவாறு பிச்சை எடுத்தார்.
இதுக்குறித்து செய்தியாளரிடம் பேசிய காந்தியவாதி ரமேஷ், தனக்கு கடன் தர மறுத்த பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து வங்கி முகப்பில் நின்று திருவோடு ஏந்தியப்படி பிச்சையேடுப்பதாக கூறினார். மேலும் திரைப்படம் எடுக்கவும், சாராய கம்பெனி நடத்தவும் கடன் தரும் தேசிய வங்கி, மத்திய அரசே தீர்மானிக்கும் தேர்தலுக்கு கடன்தர மறுப்பதை கண்டித்து பிச்சை எடுக்கிறேன் என்று தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.