நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டி இன்று தொடங்கியது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயில் வசதி! - Chennai Beach
சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்ற பின், ரசிகர்களுக்கான சிறப்பு ரயில் வசதியை ரயில்வேத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த பின் ரசிகர்கள் வீடு திரும்ப, சிறப்பு பறக்கும் ரயில் வசதியை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்படும் பறக்கும் ரயில், சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரியா 12 அல்லது 12.05 மணிக்கு வந்து சேரும். மேலும், அந்த ரயில் வேளச்சேரிக்கு நள்ளிரவு 12.35 மணிக்கு சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வேளச்சேரியில் இருந்து இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்படும் பறக்கும் ரயில், சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரியாக இன்று நள்ளிரவு 11.58 அல்லது 12.03 மணிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ரயில் சென்னை கடற்கரைக்கு 12.15 மணிக்கு சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.