ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வரலாறு:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 1971ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அணிகள், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்திய பின், தங்களை அதற்கு ஏற்றார் போல் தயார் படுத்திக் கொண்டன.
1975 முதல் 1987 வரை:
பின், ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தம் வகையில், ஐசிசி 1975இல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் எனவும் ஐசிசி தெரிவித்தது. அதன்படி, 1975, 1979, 1983 என தொடர்ந்து மூன்றுமுறை இந்தத் தொடரனாது இங்கிலாந்தில் 60 ஓவர்களாக நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதில், 1975, 1979 என பேக் பேக் டூ சாம்பியன் பட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.இதையடுத்து, 1983இல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதால், 1987இல் இந்தத் தொடரானது முதல்முறையாக ஆசியக் கணடத்துக்கு (இந்தியா, பாகிஸ்தான்) நடைபெற்றது. அதுவரை 60 ஓவர்களாக நடைபெற்ற வந்தத் தொடர் இம்முறை 50 ஓவர்களாக நடைபெறும் என ஐசிசி ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டுவந்தது.1983இல் பங்கேற்ற அதே எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக் கோப்பையின் அதிநவீன வளர்ச்சி 1992:
இதனால், 1992இல் இந்தத் தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது பல்வேறு வளர்ச்சிகள் அடைந்ததிருந்தாலும், அதன் தொடக்கப்புள்ளியாக இந்தத் தொடர்தான் பார்க்கப்பட்டது.
கலர் ஜெர்சி, பகலிரவு போட்டி:
முதல் நான்கு உலகக் கோப்பை தொடர்களில் டெஸ்ட் ஜெர்சியை உடுத்துக் கொண்டு விளையாடிய அணிகள், இந்தத் தொடரில் தங்களுக்கென பிரத்யேக கலர் ஜெர்சியுடன் களமிறங்கியது. அதுமட்டுமில்லாமல், இந்தத் தொடரில் இருந்துதான் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பகல் இரவு போட்டிகளாக நடத்தப்பட்டன.
தென்னாப்பிரிக்காவின் வருகை:
இதைத்தவிர, இனவெறி சர்ச்சையில் சிக்கிய இருந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்தத் தொடரில் இருந்துதான் தனது முதல்உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் தகுதியை பெற்றது. இதனால், வழக்கமாக எட்டு அணிகள் பங்கேற்றுவந்த இந்தத் தொடரில் முதன்முறையாக ஓன்பது அணிகள் கலந்துக் கொண்டன. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஒரே ஸ்டைலில் நடைபெற்ற 1996, 1999, 2003 உலகக் கோப்பை:
1996 உலகக் கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதேபோல், 1999இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரிலும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 1996இல் இருந்துதான் உலகக் கோப்பையில் நாக் அவுட் போட்டிகள் அறிமுகமாகின. 1996இல்இலங்கை அணியும், 1999இல் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தியது.
பின், 2003 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், தென்னாப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்றது. இதில், கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 14 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 1996 ஸ்டைலில் நடைபெற்ற இந்தத் தொடரிலும், ஆஸ்திரேலியா அணி தனது மூன்றாவது உலகக் கோப்பை தூக்கியது.
வெஸ்ட் இண்டீஸுக்கு மாறிய 2007 தொடர்:
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் சற்று மந்தமான தொடராகவே பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றதுதான். 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்ப்டடு, பின் நாக் அவுட், அரையிறுதி, இறுதிப் போட்டியாக நடத்தப்பட்டது. இதில், ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசாத்திய சாதனை படைத்து.
மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய 2011, 2015 உலகக் கோப்பை தொடர்:
2007இல் நடந்தத் தொடர் பெரும் வரவேற்பு பெறததால், 2011, 2015 உலகக் கோப்பை தொடர், 2003இல் நடைபெற்ற ஸ்டைலிலேயே நடைபெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற்ற 2011இல் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தியது.
அதிரடி மாற்றத்துடன் சொந்த மண்ணில் திரும்பிய உலகக் கோப்பை 2019:
2019இல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்தது. முன்னதாக, 14 அணிகள் பங்கேற்றுவந்த இந்தத் தொடரில் இம்முறை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து, இந்தியா, இலங்கை,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான்,வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் மட்டுமே கலந்துக்கொள்ளும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்தது. இதில், அனைத்து அணிகளும் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதுதான் இந்தத் தொடரின் சிறப்பம்சம்.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் (9 அணிகள்)மோதும். இதில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முதலில் 10 அணிகளுடன் உலகக் கோப்பை தொடரா என கிண்டலடித்த ரசிகர்கள் தற்போது, இதுதான் உலகக் கோப்பை தொடர் என கருத்து தெரிவித்துவருகின்றனர்.