தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி! - பிரெஞ்சு ஓபன்

பாரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் படுதோல்வி அடைந்தார்.

பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி

By

Published : May 27, 2019, 7:26 PM IST

டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஓன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஹுகோடெல்லியனிடம் (hugo Dellien) மோதினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர் என்ற பதற்றத்தில் இருந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஹுகோவின் அசத்தலான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனால், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 1-6, 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற ஹுகோ நாளை மறுநாள் நடைபெறவுள்ள தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் கிரிஸ் (Greece) வீரர் சிட்சிபாஸை எதிர்கொள்ள உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details