தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் 1906 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
இதில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாமிநாகப்ப படையாட்சி தனது 18 வயதில் கலந்துகொண்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், வெளியில் வந்த அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். காந்தி ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்ட தியாகி சாமிநாகப்ப படையாட்சியின் சிலை அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள தமிழ்நாடு வன்னிய பொதுசொத்து வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டது.
இதனை, வாரியத்தின் அனுமதியுடன் வன்னிய மேம்பாட்டு அமைப்பினர் சார்பில் வன்னிய ஷத்ரிய அமைப்பின் தலைவர் ராஜன் திறந்துவைத்தார்.