டெல்லி: கரோனா தாக்கத்தினால் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவது தள்ளிபோகாது என பிரான்ஸ் ஆயுதப் படை அமைச்சர் பார்லி தெரிவித்ததாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ரஃபேல் போர் விமானங்கள் சரியான நேரத்தில் கிடைக்கும்: பிரான்ஸ் - Rafale deal
ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
rajnath singh rafale
கரோனா பரவல் ஊரடங்கால், இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை அனுப்புவதில் காலதாமதம் இருக்காது என தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பிரான்ஸ் ஆயுதப் படை அமைச்சர் பிளாரன்ஸ் பால்லே தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியா செப்டம்பர் மாதம் 2016ஆம் ஆண்டு 36 ரஃபேல்களுக்கு பிரான்சுடன் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.