நாகை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை திருநங்கைகள் வழிமறித்து பாலியல் தொழில் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில், நேற்று (செப்.4) இரவு நாகை முதல் நாகூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான வெளிப்பாளையம் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அவ்வழியக சாலையில் செல்வோரை பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக அழைத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, அங்கு காவல் துறையினரைக் கண்ட திருநங்கைகள் தப்பியோடினர்.
அதனைத் தொடர்ந்து, இவர்களை வழிநடத்தி வந்த, அங்கிருந்த கருவேலங்காட்டில் பதுங்கி இருந்த காரைக்கால், மன்னார்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஞானப் பிரகாசம், அஜய்பால், வெங்கடேசன், திருமுருகன் ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.