ராமநாதபுரத்தில் காரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 118 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 73 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 44 பேர் சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் நான்கு பேருக்கு கரோனா உறுதி! - Four persons Affected Corona In Ramanathapuram
ராமநாதபுரம்: ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு அலுவலர்கள் உள்பட நான்கு பேருக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை கீழக்கரை, ராமநாதபுரம் நகர் பகுதிகளில் கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உள்பட மூன்று அரசு அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று 31 வயது பெண், 34 வயது ஆண் அரசு அலுவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் பணிபுரிய சென்னையில் இருந்து வந்த 50 வயது அலுவலக கண்காணிப்பாளர், 38 வயதுடைய ஒருவர் என நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.