சென்னை கே.கே. நகர் அருகிலுள்ள ராணி அண்ணா நகர் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு பணம் வைத்து சூதாடிய வடபழனி பகுதியைச் சேர்ந்த இக்பால், செல்வம், பரமசிவம், கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: கே.கே. நகரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடமிருந்து பணம், சீட்டுக்கட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
![சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:35:43:1599894343-tn-che-02-gamblingarrest-script-7202290-12092020120622-1209f-1599892582-521.jpg)
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
பின்னர் அவர்களிடமிருந்து 30 ஆயிரத்து 500 ரூபாய், விளையாட பயன்படுத்திய சீட்டுக்கட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.