உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் பாகிஸ்தானிலும் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கரோனா! - Former pakistan affected by Corona
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கரோனா!
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 வயதான கிலானி ஊழல் வழக்கின் விசாரணைக்காக அந்நாட்டின் தேசிய அமைப்பிற்குச் சென்றுவந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
முன்னதாக, அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சபாஷ் ஷெரிப் பண மோசடி வழக்கில் தேசிய அமைப்பிற்கு விசாரணைக்குச் சென்றுவந்தபின் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.