தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மோடிக்கு மு.க. அழகிரி வாழ்த்து - மோடி

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடிக்கு மு.க. அழகிரி வாழ்த்து

By

Published : May 23, 2019, 11:11 PM IST

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் 333 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

பிரதமர் மோடி மீண்டும் வெற்றிபெற்றதையடுத்து, அரசியல் தலைவர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி, வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

மோடிக்கு மு.க. அழகிரி வாழ்த்து கடிதம்

அதில், பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், பல்வேறு பொறுப்புகளை ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details