சேலம் மாவட்டம், ஆத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிவிழுந்தான் காலனி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது தோட்டத்திலுள்ள பாசன கிணற்றில் செவ்வாய் (ஏப்.20) அன்று இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தவறி விழுந்தது.
கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு! - சேலம் மாவட்டம் ஆத்தூர் வனச்சரகம்
சேலம்: ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட வனத்துறையினர் பத்திரமாகக் காப்புக் காட்டுக்குள் விட்டனர்.
forest guard
இதனையறிந்த மணிவிழுந்தான் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட மானை வனத் துறையினர், அருகிலுள்ள காப்புக் காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.