திருப்பூர் ஏ.பி.டி. சாலையில் அமைந்துள்ள அய்யனார் விலாஸ் (நெல்லை லாலா) பேக்கரியில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், பெயரளவில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டு பயன்படுத்தாமலேயே ஏராளமானோர் கூடுவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
விதிமுறை மீறல்: தனியார் பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை! - திருப்பூர் மாவட்ட செய்தி
திருப்பூர்: தனியார் பேக்கரியில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏராளமானோர் கூடுவதால் ஆய்வுசெய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மீண்டும் இதுபோல் நடந்தால் சீல்வைக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
![விதிமுறை மீறல்: தனியார் பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை! Food safety officer inspection](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:25:27:1593140127-tn-tpr-01-foodsafetyofficerinspection-vis-7204381-25062020201618-2506f-1593096378-329.jpg)
Food safety officer inspection
இந்நிலையில் நேற்று (ஜூன் 25) மாலை இக்கடையில் ஏராளமானோர் கூடி தகுந்த இடைவெளி இன்றி நின்றிருந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர், மீண்டும் இதேபோல கூட்டம் கூட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கடைக்குச் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.